§காவல் மற்றும் வருவாய் துறையில் புகார்: சோழிங்கநல்லூரில் பரபரப்பு
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில வழக்கு தொடர்பாக சாட்சியங்களை அழித்து, சட்டவிரோதமாக நில அபகரிப்பு செய்வதால் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சூளைமேட்டில் வசிப்பவர் சேது, சோழிங்கநல்லூரில் உள்ள தனது விவசாய நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு உள்ளது. நேற்று முன்தினம் காலை திடீரென்று தன் விவசாய நிலத்தில் வந்த ஜேசிபி வாகனம் தனது நிலத்தை தோண்டி, நாசப்படுத்தி, நிலத்தின் எல்லைக் குறி மற்றும் முக்கிய அடையாளங்களை அழிக்க முயன்றதாக படங்கள் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.

புகாரில், தனியார் கட்டட நிறுவனத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் அத்துமீறி நுழைந்து தன் நிலத்தை சேதப்படுத்திய போது, அதை தட்டி கேட்ட தன் பாதுகாவலர் மற்றும் தனது பிரதிநிதிகளை ஆபாச வார்த்தைகளால், ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், தனது நிலத்தை குறிவைத்து நடக்கும் அசாதாரண சம்பவங்களுக்கு குறிப்பிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் அந்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேது தனது புகார் நகலை தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் தாம்பரம் காவல் ஆணையருக்கும் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் காரணமாக சோழிங்கநல்லூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tamilnadu information commision order
PDF Document — click to open







